Advertisment

சென்னையில் மகளின் பள்ளித் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; 7 பேர் கைது

சென்னையில் பெண் ஒருவர் தனது மகளுடன் படிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தந் வகுப்புத் தோழிகளைக் குறிவைத்து அவர்களின் பொருளாதாரப் பிரச்னைகளை சரிசெய்வதாகக் கூறி விபச்சாரத்திற்குத் தள்ளினார்.

author-image
WebDesk
New Update
sexual harassment, sexual assault, POCSO act, child trafficking

இதில் 70 வயது முதியவர் உட்பட 6 பேர் சென்னை காவல்துறையின் துணைத் தடுப்புப் பிரிவினரால் (ஏ.வி.எஸ்) கைது செய்யப்பட்டனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் மகளின் வகுப்புத் தோழிகளின் சமூக ஊடக சுயவிவரங்களைப் பார்த்த பிறகு, அவர்களைத் தேர்ந்தெடுத்த அந்த பெண், அவர் பகுதி நேர வேலை தேடும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து, பின்னர் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

சென்னையில் பள்ளி செல்லும் சிறுமிகள் விபச்சாரத்தில் தள்ளப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்த போலீசார்,  மகளின் வகுப்புத் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 37 வயது பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர். அந்த பெண் தனது மகளுடன் படிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தந் வகுப்புத் தோழிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பொருளாதாரப் பிரச்னைகளை சரிசெய்வதாகக் கூறி விபச்சாரத்திற்குத் தள்ளினார்.

இதில் 70 வயது முதியவர் உட்பட 6 பேர் சென்னை காவல்துறையின் துணைத் தடுப்புப் பிரிவினரால் (ஏ.வி.எஸ்) கைது செய்யப்பட்டனர். போலீசார் அந்த கும்பலிடம் இருந்து 18 மற்றும் 17 வயதுடைய 2 சிறுமிகளை மீட்டு ஆலோசனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (தெற்கு), சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் நலக் குழு (தெற்கு) அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்து மேலும் ஆலோசனை வழங்குவதில் போலீசாருக்கு உதவினர்.



இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சனிக்கிழமை இரவு, இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீஸார், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனை செய்து 2 சிறுமிகளையும் மீட்டதாகத் தெரிவித்தனர்.

போலீசார் சோதனையின்போது சுற்றி வளைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சோதனையில் சிக்கிய முக்கிய குற்றவாளியான கே. நதியா (37) சமூக ஊடகங்களில் அவர்களின் சுய விவரங்களைப் பார்த்து தனது மகளின் வகுப்புத் தோழிகளை குறிவைத்து செயல்பட்டது தெரியவந்தது. 



காலப்போக்கில், நதியா அவர்களிடம் ரூ. 25,000 மதிப்பிலான பணம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். கடைசியில் சிறுமிகள் நதியாவை எதிர்த்தால், அவர்களது வீடியோக்கள் வாடிக்கையாளர்களிடம் இருப்பதாகக் கூறி அவர்களை மிரட்டி உள்ளார். மேலும், அந்த வீடியோக்கள் அவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்படும் நதியா மிரட்டியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீசார் நடத்திய விசாரணையில், சில சிறுமிகள் ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற பிற நகரங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களில் சிலர் கோயம்புத்தூர் மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த வயதான ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 



“சிறுமிகள் ஏதேனும் ஒரு இடத்தில் இரவில் தங்கியிருக்க வேண்டியிருந்தாலோ அல்லது பயணம் செய்ய வேண்டியிருந்தாலோ அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி பெற்றோரிடம் பொய் சொல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவத்தில், நதியாவைத் தவிர, சென்னையைச் சேர்ந்த சுமதி (43), மாய ஒலி (29), ஜெயஸ்ரீ (43), ராமச்சந்திரன் (42), ராமேந்திரன் (70) - கோவையைச் சேர்ந்த அசோக்குமார் (31) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கும்பலால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், விவரங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment