வடமாநிலத்தில் நரபலி சடங்கு தனக்கு நிகழவிருப்பதால் அச்சத்தால் தமிழகத்தில் போபால் பெண் தஞ்சம் புகுந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

வடமாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ள தனது வளர்ப்பு தாயால் நரபலி கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சம் அடைந்த பெண் வழக்கு தொடுத்துள்ளார்.
இதை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரித்து உத்தரவு வழங்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக ஷாலினி சர்மா மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“இந்த 21ம் நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகங்களை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதை கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது”, என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.