துண்டு துண்டாக வெட்டி பெண்ணை கொன்றது திரைப்பட இயக்குநரா? மீதி உடலை இங்கே தான் வீசினாராம்

சென்னை பெருங்குடியில் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்பாகங்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வழக்கீல் அப்பெண்ணின் கணவரும் திரைப்பட இயக்குநருமான பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 21ம் தேதி சென்னை மாநகரமே பதற்றமான செய்தியை தான் பேசிக் கொண்டிருந்தது. பெருங்குடி குப்பை கிடங்கில் ஒரு பையில், பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்களும் துண்டு துண்டாக கிடந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரால் வெறும் வெட்டுண்ட கை கால்கள் மட்டுமே மீட்க முடிந்தது. ஆனால் பெண்ணின் உடல் என்ன ஆனது. அவர் உயிருடன் இருக்கிறாரா? போன்ற துப்புகளை தேடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

குப்பை கிடங்கில் இருந்த உருப்புகளுக்கு சொந்தமான பெண் அடையாளம்

போலீசாருக்கு சாதகமாக இருந்த ஒரே ஒரு துப்பு, பெண்ணின் கையில் வரையப்பட்டிருந்த டாட்டூ மட்டுமே. அந்த டாட்டூ புகைப்படத்தை வெளியிட்டு, அடையாளம் தெரிந்த யாராக இருந்தாலும் போலீசாருக்கு உடனே தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அடையாளம் காண்பதில் கடினங்கள் இருந்தது.

பின்னர், கையில் இருக்கும் ரேகை வைத்து அடையாளம் காணலாம் என்ற முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். ஆனால் அதிலும் உறுதியாக தெரியாது என்ற தகவல் போலீசாருக்கு ஏமாற்றம் மட்டுமே அளித்தது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் காணாமல் போனதாக வந்தனர். அவர்களில் பலர் உடலைப் பார்த்த பின் தங்களது பெண் இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் தூத்துக்குடி டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது.

அவரது உறவினர்கள் கை, கால்களைப் பார்த்து அது தூத்துக்குடியில் கடந்த பொங்கலன்று சென்னை சென்ற பின் காணாமல்போன சந்தியா என தெரியவந்தது. திரைப்பட இயக்குநரான பாலகிருஷ்ணன் காதல் இலவசம் என்ற படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் சென்னை ஜாபர்கான் பேட்டையிலேயே வசித்துள்ளார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 16 நாட்களுக்கு பிறகு அந்த உடல்பாகங்கள் எந்தப் பெண்ணுக்கு உரியது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவின் உடல்பாகங்கள் அது என்றும் அவருக்கு வயது 38 என்றும் போலீசார் கூறியுள்ளனர். சந்தியா தனது கணவருடன் ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்துள்ளார். அவரின் கணவரே சந்தியாவை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கணவர் தான் சந்தியாவை கொன்றதாகவும், மரம் அறுக்கும் ரம்பம் மூலம் உடல் பாகங்களை வெட்டி மூட்டையில் கட்டி தூக்கி எறிந்ததாகவும், மீதம் இருக்கும் உடலை ஜாஃபர்கான்பேட்டை – ஈக்காட்டுத்தாங்கள் இடையே இருக்கும் ஆற்றில் வீசியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்ணில் பாதி உடல் பாகத்தை ஆற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close