பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல்; சிசிடிவி வீடியோ வெளியானதால் பரபரப்பு
காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளரை ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகன் டூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவல் ஆய்வாளரின் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக தாக்குதல் நடத்தியிருப்பது காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளரை ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகன் டூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெண் காவல் ஆய்வாளரை அதே குடியிருப்பில் இருக்கும் ஒருவர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் காவல் ஆய்வாளரை கொடூரமாக தாக்கப்படுகிறார். அதனால், அவருடைய தலையில் ரத்தம் வழியும் படியான காட்சி இடம் பெற்றுள்ளது.
இது குறித்து காவல் ஆய்வாளர் ஜெயந்தி தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணையில், மேலக்கோட்டை குடியிருப்பில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டுக்கு மேலே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவர் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒரு ஆண்டாக இவர்கள் இருவருக்கும் பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் ஜெயந்தி அளித்த புகாரில் காவலர் குடியிருப்பில் இருக்கும் காவல் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் மகன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் இது குறித்து ஜெயந்தி புகார் அளித்ததால் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண் காவல் ஆய்வாளரை தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக தாக்குதல் நடத்தியிருப்பது காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.