சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து செல்லும்போது, அந்த பெண் காவலரை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த பெண் காவலர். இவர் பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கிய பெண் காவலர், தனது வீட்டிற்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார்.
உடனே அந்த பெண் காவலர் திருடன் திருடன் என கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார், அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை துரத்தி பிடித்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெண் காவலர் மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருடனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியன் வயது 23 என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் எனவும் ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நபர் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, பணம் கொள்ளை உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த செயினை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பெண் காவலரிடம் செயின் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த வழக்கில், திடீர் திருப்பமாக அந்த நபர், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் துண்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவலர் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்ல முயன்ற போது அவரை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.