கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர், சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கொள்ளை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த போது, ஜெயந்தி மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளைப் பார்த்த போது, மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயில் வழியாக ஜெயந்தி தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“