8-வது மாடியிலிருந்து விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்

Woman Software Engineer jumps to death from 8th floor: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி பூங்காவில் பணிபுரிந்த பெண் ஊழியர் அலுவலக வளாகத்தின்...

Woman Software Engineer jumps to death from 8th floor: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி பூங்காவில் பணிபுரிந்த பெண் ஊழியர் அலுவலக வளாகத்தின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி பூங்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த பெண் நேற்று மாலை 7 மணிக்கு ஐடி பூங்கா கட்டிடத்தில் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அம்பத்தூர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட பெண் திருச்சியைச் சேர்ந்த டானிதா ஜூலியஸ் என்பதை அடையாளம் கண்டறிந்தனர். டெனிதா ஜூலியஸ் நேற்றுதான் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில், வளாகத்தின் 8-வது மாடியில் இருந்து டாலிதா குதித்தது தெரியவந்தது. அவர் எட்டாவது மாடியில் இருந்து குதிக்கும்போது அவரது தலை இரண்டாவது மாடியில் மோதி கீழே விந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஐ.டி.பெண் ஊழியர் டானிதாவின் தற்கொலை குறித்து அவருடைய சக ஊழியர்கள் மற்றும் எச்.ஆர். மேனஜர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டனர். மேலும், அவர் வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது ஏதேனும் ஊழியர்களின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து வந்த டெனிதாவின் பெற்றோர், இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தனர். போலீசாரிடம் பேசிய அவர்கள், “உடல் பருமனாக இருந்த டெனிதா, அடிக்கடி மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார். இதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், அலுவலகத்தில் கூட லிஃப்டை பயன்படுத்தாமல், படிக்கட்டுகளை தான் வழக்கமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

அதே போல் சம்பவத்தன்றும் வேலை முடித்துவிட்டு, நடந்து வரும் போது எதிர்பாராத விதமாக 8-வது மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே கால் தவறி விழுந்தாரா? தற்கொலையா அல்லது வேறு எதும் காரணமா என்ற நோக்கில் மேலும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள் போலீஸார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close