Woman tried to put fire on herself in front of actor Ajith house Viral Video Tamil News :சென்னை ஈஞ்சம்பாக்கம், அஜீத் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஃபர்சானா என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீக்குளிக்கச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் அஜித், தன்னுடைய அடுத்த படமான ‘வலிமை’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அவர் மீது தண்ணீர் ஊற்றி பிறகு, அவரை கைதும் செய்தனர். தீக்குளிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், அந்த வீடியோவில், அந்த பெண், “என் மரணத்திற்கு அஜித் தான் காரணம்” என்று கூக்குரலிடுவது பதிவாகியுள்ளது. குறிப்பிடப்படும் அந்தப் பெண், சென்னையின் பிரபல மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் ஃபர்சானா. இவர் முன்னதாக அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அவர் தனது வேலையை இழந்ததாகக் குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபர்சானா விசாரணையில் உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil