ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளனர்.
அப்போது ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது டீ குடிப்பதற்காக பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின் கம்பி பேருந்தின் மேல் தலத்தில் உரசியுள்ளது. இதன் காரணமாக பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை அறியாமல் டீ அருந்துவதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அகல்யா(20) என்ற பெண் பேருந்து கம்பியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலணி அணியாமல் பேருந்தின் இரும்பு கைப்பிடியைப் பிடித்து இறங்க முயன்ற போது அகல்யா மீது மின்சாரம் பாய்ந்ததாக அவருடன் இருந்த மற்றொரு பெண் சந்தியா கூறினார்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“