திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அதிவேகமாக ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 36 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி கருச்சிதைவு ஏற்பட்டது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் பிப்ரவரி 8 பிற்பகல் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக அவரது கணவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டபோது கரு நல்ல நிலையில் இருந்ததாகவும் "இன்று (சனிக்கிழமை) கருவின் இதயத் துடிப்பு குறைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர், நெப்ராலஜிஸ்ட், எலும்பியல் மருத்துவர் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அந்த பெண்ணுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கினோம்" என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்தார்.
வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதை அடுத்து கருக்கலைப்புக்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.