எதிர்ப்பு தெரிவிக்கும் வடிவமாக மாறிய கோலம்; பெசண்ட் நகரில் பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
குடியுரிமை திருத்தச் சட்டத்துகு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை பெசன்ட் நகரில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வடிவமாக கோலத்தை கைக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

women arrested for performed rangoli kolam, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக் கோலமிட்ட பெண்கள் கைது, women performed rangoli kolam against CAA, மு.க.ஸ்டாலின், கனிமொழி, 6 women arrested in chennai besant nagar, MK Stalin condemn for six women arrest, protest against CAA
குடியுரிமை திருத்தச் சட்டத்துகு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை பெசன்ட் நகரில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வடிவமாக கோலத்தை கைக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், சென்னை பெசண்ட் நகரில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோலமிட்ட 6 பெண்களை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. pic.twitter.com/Ran4FE5r2V
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது” என்று கண்டித்துள்ளார்.
நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.#Rangoli#கோலம்pic.twitter.com/gtUJfT9OUR
திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.” என்று அதிமுக அரசை சாடியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ, சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்ட பெண்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், மக்கள் எழுச்சியை நசுக்க முடியாது என்பதை வரலாற்றில் இருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறினார்.
சென்னையில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அவர்கள் கோலம் போட்டதற்காக கைது செய்யப்படவில்லை. கோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடவடிக்கை நடந்திருக்கும்” என்று கூறினார்.
இதனிடையே, கிரேஸ் பானு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எந்த வழியிலேனும் நாங்கள் விஷத்தனமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.. ரங்கோலி நம்முடைய கருவி” என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில்,தமிழகத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான எளிய வடிவாமாக கோலம் மாறியுள்ளது.