சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கம் வகையில் ராபிடோ பைக் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்த பைக் சேவை, முதற்கட்டமாக சென்னையின் ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மெட்ரோ நிலையங்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பயணம் செய்யும் பெண்கள், கூறிவந்த கட்டணத்தில் பாதுகாப்பாக வீடு திரும்பலாம் என்று மகிழ்ச்சியடைகின்றனர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
"சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தற்போதைய நிலையில் நந்தனம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய ரயில் நிலையங்களில் ரேபிடோ பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி விடுத்த அறிக்கை: மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணைப்பு வாகன சேவை வழங்குவதில் நோக்கமாக கொண்டுள்ளது. பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை தொடங்கி உள்ளது.
நிலையான போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இச்சேவையில் பெண்களால் இயக்கப்படும் 50 பைக்குகள் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களால் இயக்கப்படும் இந்த பைக் சேவை வசதி முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்படுகிறது.
தேவை மற்றும் சேவையின் அடிப்படையில் பின்னர் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்படுகிறது", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil