scorecardresearch

சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி: பெண்ணின் பையில் இருந்த 22 பாம்புகள்

மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த பெண்ணின் பையில் 22 பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

snake
snake

மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த பெண்ணின் பையில் 22 பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேஷியா கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பெண் பயணியின் பை மற்றும் உடமையிலிருந்து 22 பாம்புகள் மற்றும் ஒரு பஞ்சோந்தி மீட்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, பல்வேறு பிளாஸ்டிக் பைகளில் பல்வேறு வகையான பாம்புகள் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பெண்ணை கைது செய்தனர். சென்னை சுங்கதுறை அதிகாரிகள் செய்த ட்விட்டில் “ 28ம் தேதி சென்னை விமானநிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த  விமான எண் : ஏகே13-யில் பயணித்த  பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 22 பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972 படி, பாம்புகள் மற்றும் பச்சோந்தி மீட்கப்பட்டது” என்று ட்வீட் செய்துள்ளனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Women carried 22 snakes arrested by customs in chennai airport