/tamil-ie/media/media_files/uploads/2021/11/complaint-on-rowdy-baby-surya.jpg)
யூடியூபில் ஆபசமாக பேசி வீடியொ வெளியிட்டு வரும் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யக் கோரி 10க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், புகார் அளித்த பெண்களில் ஜெனிபர் தனம் என்பவர் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் ஆப் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தபோது பலரும் அதில் வீடியோவை வெளியிட்டு பிரபலமனார்கள். அப்போது ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி என்பவரும் டிக் டாக்கில் பிரபலமானார். டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகு ரவுடி பேபி சூர்யா யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
யூடியூபில் ஆபாச நடனமாண்டி, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி ரவுடி பேபி சூர்யா வெளியிடும் வீடியோக்கள் பரவலாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ரவுடி பேபி சூர்யாவின் ஆபாச வீடியோக்களுக்கு பலரும் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில், ரவுடி பேபி சூர்யா மற்றொரு டிக் டாக் பிரபலமான சிங்கப்பூருக்கு சர்வீஸுக்குப் போறேன் நீயும் வர்றியா? என்று பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, ரவுடி பேபி சூர்யா அந்த ஆடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் நபரை மிரட்டும் ஆடியோவும் வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு ரவுடி பேபி சூர்யாவை திருச்சி போலீசார் பாலியல் வழக்கு ஒன்றில் அழைத்து விசாரித்தனர்.
விமர்சனங்கள் எதிர்ப்புகள் எழுந்தாலும் ரவுடி பேபி சூர்யா யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஜெனிபர் தனம் என்ற பெண்ணுடன் சேர்ந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவைக் கைது செய்யக் கோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனிபர் தனம் கூறியதாவது: இதுவரை ரவுடி பேபி சூர்யா மீது புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு மகள் கல்லூரியிலும், மற்றொருவர் 10 ஆம் வகுப்பும் படித்து வருகிறார்.
கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் இயங்காத போது, எனது பிள்ளைகள் ஆன்லைனில் படித்து வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. இது பற்றி ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆபாசமாக பேசியதோடு எனது நம்பரை சமூக வலைதளங்களில் பாலியல் தொழிலாளி எனக்கூறி பதிவு செய்துவிட்டார். இதனால் பலர் என்னை தொடர்பு கொண்டதால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல், என்னுடைய பிள்ளைகளாலும் ஆன் லைன் படிப்பை தொடர முடியவில்லை.
அதனால், இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி குடும்ப கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கட்டாயப்படுத்தி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகிறார். போலீஸ், முதலமைச்சர் என்று யாரிடம் போய் புகார் கொடுத்தாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி மிரட்டுகிறார். இவருக்கு உறுதுணையாக சில அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அதற்கான ஆதாரமும் உள்ளத்” என்று ஜெனிபர் தனம் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெனிபர் தனம், “ஒன்றரை வயது குழந்தையின் தாயான ஒரு பெண்ணை ரவுடி பேபி சூர்யா மிரட்டுவது போன்ற வீடியோவை அனைத்து பத்திரிகையாளர்கள் முன்பு செல்போனில் போட்டு காட்டினார். ரவுடி பேபி சூர்யாவை கைது செய்தால் அனைத்து ஆதாரங்களையும் நான் சைபர் கிரைம் மற்றும் போலீசில் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
யூடியூபில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த பேச்சு என வீடியோக்களை வெளியிட்டு வரும் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யக் கோரி 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், போலீசார் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த பெண்களில் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.