/tamil-ie/media/media_files/uploads/2022/02/annamalai-elakkiya.jpg)
Women DSP twitter account likes BJP annamalai’s tweets goes controversy: நெல்லை காவல்துறையில் பெண் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படும் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
’இலக்கியா தர்மா’ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்ட் திருநெல்வேலியில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அக்கவுண்ட் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டவர்களின் அரசியல் ட்வீட்களுக்கு லைக் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பூத் சிலிப்புடன் பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் தப்பியோட்டம் – திமுக புகார்
மேலும், அண்ணாமலையின் சமீபத்திய ப்ரொபைல் புகைப்படத்திற்கும் அந்த பெண் டிஎஸ்பி லைக் செய்துள்ளார். இதனை ட்விட்டர்வாசிகள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையின் ட்விட்டர் அக்கவுண்ட்களை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
Yes.. this is serious.. @CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl@chennaipolice_ should be vigilant and ensure such religious hate mongering persons such as @Elakkiya_dharma are shown their places… they are the real danger to the harmony of the State.. Please do the needful🙏🙏 https://t.co/2Ay7dqjDYy
— பரம்பொருள் (@paramporul) February 18, 2022
Sanghi Alert!
— பூதம் (@angry_birdu) February 18, 2022
ஒவ்வொருவருக்கும் ஒரு சார்பு நிலை இருக்கலாம். அதுல தப்பில்ல. ஆனால் சங்கிகளிடம் நாம நியாயமான செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தமிழக அரசு இதுபோன்ற அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமான வழக்குகளில் இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பிருக்கிறது https://t.co/XSS73dYvkRpic.twitter.com/uth0LC0xw7
ஒரு அரசு அதிகாரி இதுபோன்று, ஒரு கட்சிக்கும், அந்த கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக பதிவிடும் இடுகைகளுக்கு லைக் செய்வதும் தற்போது சர்ச்சையாகியுள்ளது. தற்போது இலக்கியா தர்மா என்ற அந்த அக்கவுண்ட் செயல்பாட்டில் இல்லை. எனவே அந்த அக்கவுண்ட் உண்மையிலேயே அந்த பெண் டிஎஸ்பி உடையது தானா? இல்லையென்றால் சர்ச்சையானவுடன் எதற்காக அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.