சென்னை துரைப்பாக்கத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது, பெண் ஒருவரை துண்டு துண்டாக சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மணலி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சூட்கேஸ் கிடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள குமரன் குடில் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இளைஞர் மணிகண்டன் என்றும் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவிம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் மணிகண்டன் தீபாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we