கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடும் ஓதுவாராக இதுவரை ஆண் பணியாளர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது.
இதையும் படியுங்கள்: மனோ தங்கராஜ் தூண்டுதலின் பெயரில் பா.ஜ.க.வினர் மீது பொய் வழக்கு; பொன் ராதாகிருஷ்ணன் புகார்
நான்கு கால தீபாராதனை நேரங்களில் தேவி பகவதியை போற்றி பாடும் பாடல்கள் பாட படாது இருந்த நிலையில், இது குறித்த உள்ளூர் பக்தர்கள், பல பக்த சங்கங்கள் அறநிலையத்துறை குமரி மாவட்ட அதிகாரி மற்றும் தமிழக அறநிலையத்துறை அதிகாரிக்கும், துறை சார்ந்த அமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனைப் படி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தற்போது ஒதுவார் நியமனம் செய்துள்ளார். அதுவும் முதல் முறையாக ஓதுவார் பணிக்கு ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரசன்னா தேவி என்ற பெண் ஓதுவார் இனி தேவாரம் உள்ளிட்ட பாடல்களை பூஜை வேளைகளில் பாடுவார். இதனை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பக்த சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், பெண் தெய்வம் கோவிலில் கொண்டுள்ள கோவிலுக்கு பெண் ஓதுவார் என்பது மிகவும் பொருத்தமானது என வரவேற்றுள்ளார்கள்.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil