Advertisment

திருமணத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு: போலி பத்திரிகை அடித்த 'பலே' ஆசாமி; 3 ஆண்டுகளுக்குப் பின் கைது

திருவேங்கைநாதன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து, அதனை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களிலும் விநியோகம்.

author-image
WebDesk
New Update
puhd.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருவேங்கை நாதன் (வயது 40). இவர் திருமணம் செய்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பெண் தேடி வந்தார். இந்த நிலையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மணச்சநல்லூர் பகுதியில் இருப்பதை அறிந்தார். உடனே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினார். 

Advertisment

கடந்த 2021-ம் ஆண்டு அவரது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த பெண்ணிற்கு திருவேங்கையை பிடிக்கவில்லை. அதை தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர்.

ஆனால் திருவேங்கையால் அந்த பெண்ணை மறக்க இயலவில்லை. நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என ஏங்கினார். பின்னர் ஆத்திரம் அடைந்த திருவேங்கைநாதன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து, அதனை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களிலும் விநியோகம் செய்துள்ளார். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனே இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திருவேங்கை நாதனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலி திருமண பத்திரிகை அச்சடித்து விநியோகம் செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், திருவேங்கைநாதன் தலைமறைவானார். 

போலீசார் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் அவரது சொந்த ஊரான வத்தனக்கோட்டையில் உள்ள வீட்டில் இருந்த வேங்கைநாதனை 3 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்று இரவு கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வினியோகம் செய்த வாலிபரை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Trichy
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment