நாகை மாவட்டத்தில், பெண் உதவி ஆய்வாளர், 90 வயது மூதாட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து, அவரது வீடுவரை அழைத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் திருக்குவளையில், அரிசி மூட்டையுடன் சாலையோரத்தில் பேருந்திற்காக நீண்ட நேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்தார். அப்போது வலிவலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் சுமதி, தனது இருசக்கர வாகனத்தில் பத்திரமாக ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். இந்த நிகழ்வை பெண் உதவி ஆய்வாளருக்கு பின்னால் சென்ற ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார். அவர் அதை சமூகலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தை அவனைவரும் பாராட்டி உள்ளனர். பலரால் இந்த வீடியோ லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“