மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த அனைத்து விண்ணப்பங்களும் அரசிடம் ஏற்கனவே உள்ள தரவுகளுடன் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்களை கடந்த 5ம் ஆம் தேதிக்குள் இறுதி செய்ய தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் முடிவில், அரசு அறிவித்த தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெற ஒரு கோடி பேருக்கு அதிகமானோர் வருவதாக அதிகாரிகள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினர். இன்னும் 6 நாட்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 11ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.
இதில், உரிமைத் தொகை பயனாளர்களின் இறுதிப்பட்டியல், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்-15 தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டலின் தொடங்கி வைக்க உள்ளார்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“