ரூ.500 வாடகைக்கு பிச்சையெடுக்கும் குழந்தைகள்: திடுக்கிடும் தகவல்

திருச்சியில் குழந்தைகளை ரூ.500க்கு வாடகைக்கு எடுத்து பிச்சையெடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியில் குழந்தைகளை ரூ.500க்கு வாடகைக்கு எடுத்து பிச்சையெடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Women who were begging with their children rescued in Srirangam

ஸ்ரீரங்கத்தில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்த பெண்கள் மீட்கப்பட்டனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் நலகுழுமம் ஆகியோர் சோதனை நடத்தினார்கள்.

Advertisment

இதில், ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்து வந்த பண்ணாரி (23), மகாலட்சுமி (22), அம்சவள்ளி (25), இந்திரா (27) ஆகியோர் மீட்கப்பட்டனர்.

இவர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காப்பங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் குழந்தைகளை ரூ.500க்கு வாடகைக்கு பெற்று பிச்சை எடுக்கும் நிகழ்வும் ஸ்ரீரங்கத்தில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: