scorecardresearch

நாட்டிலேயே பெண்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு காவல்துறை முன்னோடி – சத்தியப் பிரியா

நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறையில் அதிக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என திருச்சி காவல் ஆணையர் சத்தியப்பிரியா தெரிவித்தார்.

நாட்டிலேயே பெண்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு காவல்துறை முன்னோடி – சத்தியப் பிரியா

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் அமிழ்ந்து பேரிருளா மறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ” என்ற மகாகவி பாரதியார் அவர்களின் கவிதை வரிக்கு முன்னுதாரணமாக திருச்சி மாநகர காவல்துறையில் முதன்மை மகளிராய் தலைமையேற்று பணியாற்றி கொண்டிருக்கும் மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தலைமையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில். மாநகரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் காவல் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்ட உலக மகளிர் தின விழா கூட்டம் நேற்று (மார்ச் 8) சிறப்பாக நடைபெற்றது.

மகளிர் தின விழாவில் காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உள்ள தடைகளை களையவும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும், ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் வரவேற்பாளர் அறை

மேலும் சத்தியப்பிரியா காவல்துறையினர் மத்தியில் பேசுகையில், “சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு என் முதற்கண் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாடு காவல்துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், பெண்களும், ஆண்களுக்கு இணையாக காவல்துறையில் பணிபுரிந்து வருவதும் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் வரவேற்பாளராக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புகார்களுடன் வரும் நபர்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளை கனிவோடு கேட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே காவல்நிலையங்களில் வரவேற்பாளராக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதல் மாநிலமாகவும், பல சமூக கட்டமைப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருவதும், காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, வேறு பணிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாக இலவச உதவி எண்கள் 1091, 181 மற்றும் காவல் உதவி செயலி (Kaval Uthavi App) தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களது அன்றாட பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளவேண்டும்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு சரகம், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் 200 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Womens day celebration in trichy