மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: விடுதி காப்பாளர் புனிதா சரண்

விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண்

புனிதா
விடுதி காப்பாளர் புனிதா சரண்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், தலைமறைவாகியிருந்த தனியார் விடுதி வார்டன் புனிதா இன்று சரண்டர் ஆகியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் மகளிர் விடுதி வைத்து நடத்தி வந்தவர் ஜெகந்நாதன். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த புனிதா மற்றும் ஜெகந்நாதனும் இணைந்து அங்கு தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறிய புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை தொடங்கியவுடன் ஜெகந்நாதனும் புனிதாவும் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஆலங்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஜெகந்ந்தான் சடலமாக மீட்கப்பட்டார். ஜெகந்நாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த எட்டு நாட்களாக தலைமறைவாகி இருந்த விடுதி வார்டன் புனிதா, இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு இணைந்திருங்கள்…

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Womens hostel lodge warden punitha surrender

Next Story
மருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி: ’21 தொண்டர்கள் மரணம் துயரம் அளிக்கிறது’- மு.க.ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com