தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அதனை மட்டுமே நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உற்பத்தியைப் பெருக்கி தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய அரசு, வீண் வதந்திகளையும் தவறான தகவல்களையும் நம்பி ஆலைகளை மூடுவதால், சமூக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்படுவது தொழிலதிபர்களல்ல, அப்பாவி தொழிலாளர்கள்தான் என கண்ணீர்மல்க குமுறுகின்றனர் வேலை இழந்த தொழிலாளர்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/05/21/OqRc2UTFHoR6FgA6wPdi.jpeg)
நாடு முழுவதும் பல பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடியிலும் மதுரா கோட்ஸ் கூட்டுறவு நூற்பாலை, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ஆகிய ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தி குறைந்ததால், அதை சார்ந்து இருந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்து பெரு நகரங்களை நோக்கி வேலை தேடிச் செல்வதால் சமூகப் பொருளாதார நெருக்கடி முற்றுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/21/1XEoKpzOnRc01c6SJsRY.jpeg)
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை நம்பி கிட்டத்தட்ட 25,000-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்து உள்ளனர். துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளக்கூடிய பலநூறு கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் மூடப்பட்ட பல்வேறு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் நலனை அரசு மீட்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலையை இழந்த பல தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை பகுதி கிராம மக்கள், தூத்துக்குடி கடலோர பகுதி வாழ் மீனவ மக்கள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், தமிழ்நாடு சந்தை சாலையோர சிறுவியாபாரத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம், பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், அகில இந்திய நாடார்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கலந்துகொண்டன.