scorecardresearch

உலக குளுக்கோமா வாரம்: மார்ச் 12 முதல் 18 வரை தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை

உலக குளுக்கோமா வாரத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி முழுமையான கண் பரிசோதனை, இலவச கண் அழுத்த நோய் பரிசோதனை தி ஐ பவுண்டேஷனில் மார்ச் 12-ம் தேதி முதல் அனைத்து கிளைகளிலும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

gluecoma, free eye test, free eye checkup, the eye foundation, coimbatore

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கச் செய்வாதல் குளுக்கோமோ வாரத்தை முன்னிட்டு வரும் 12″ஆம் தேதி முதல் முன் கூட்டியே கண் பரிசோதனையை இலவசமாக செய்து தருவதாக தி.ஐ. பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலக குளுக்கோமா வாரம் வரும் 12-ம் தேதி முதல் 18″ஆம் தேதி வரை கண்பார்வை பேரிழப்பை தடுக்க அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தி.ஐ. பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது: உலக அளவில் 80 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்பு உள்ளது இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள்.

40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8 சதவீதம் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது என கூறிய அவர் குளுக்கோமா படிப்படியாக எந்த ஒரு அறிகுறியும் இன்றி கண் அழுத்தம் அதிகரிப்பதனால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறியை உணர முடியாத பட்சத்தில் இந்த நோயினை கண்டறியாமல் விட்டு விடும் போது இந்த நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள சர்க்கரை நோய்,உயர் கிட்ட பார்வை,காயம்,வீக்கம் மற்றும் பிறவிக் கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது.

மேலும் கடந்த காலங்களில் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 50% நோயாளிகள் மட்டுமே இந்த நோய்க்கான கண் பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.

குளுக்கோமா பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம் என்பதால் நோயாளிகளுக்கு தங்கள் கண் பார்வையை தக்க வைத்துக் கொள்ள சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் உலக குளுக்கோமா வாரத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி முழுமையான கண் பரிசோதனை செய்து குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து கண்பார்வை இழப்பை தடுக்க இலவச கண் அழுத்த நோய் பரிசோதனை தி ஐ பவுண்டேஷனில் வரும் 12ஆம் தேதி முதல் அனைத்து கிளைகளிலும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்நோய் கண்டறியும் பட்சத்தில் அதற்கான அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செய்த கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: World glucoma week free eye checkup in the eye foundation