/indian-express-tamil/media/media_files/64jwTN6852ifAoFGsmGp.jpg)
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் தனியார் மருத்துவமனை, ரோட்டரி கிளப் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கை சூழலில் இதய நோய் காரணமாக மக்கள் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள், இதயத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்காக பல்வேறு பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்து எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டு அரசியல் குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறேன். தமிழ்நாட்டு அரசியலில் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். இதயத்தை பலப்படுத்தி விட்டு அரசியல் தொடர்பான கேள்விக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.