உலக பழங்குடியின தின கொண்டாட்டம்: சிதம்பரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை தளபதி நகர் இருளர் கிராமத்தில், உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பழங்குடி மக்களின் உரிமைகள், வாழ்வியல் மேம்பாடு குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

author-image
WebDesk
New Update
World Indigenous Peoples Day

பழங்குடியின மக்களின் உரிமைக்குரல்: சிதம்பரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை தளபதி நகர் இருளர் கிராமத்தில், உலக பழங்குடியின சர்வதேச மக்களின் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பழங்குடி மக்களின் உரிமைகள், வாழ்வியல் மேம்பாடு குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

Advertisment

கிரீடு நகர் தலைவர் ரவி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கீஸ்டோன் பவுண்டேசன் ஆலோசகர் ராபர்ட்லியோ, பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்க உரையாற்றினார். நீலகிரி மாவட்டம், பர்லியார் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பழங்குடி கிராம பஞ்சாயத்துத் தலைவர் சுசீலா, பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றியும், அவற்றை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்தும் விரிவாகப் பேசினார்.

கிள்ளை இருளர் பழங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முத்துக்குமார், வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் கிள்ளை இருளர் மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்துப் பேசினர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால், காடுகள் மேம்பாட்டில் பழங்குடி மக்களின் பங்கு மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், முனைவர் சங்கேஸ்வரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, பழங்குடி மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அவர்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: