உலக பார்வை தினம் (WSD-World sight day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, "ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்" சார்பில் கோவையில் "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் இன்று (அக்டோபர் 15) நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/GZ38xLpAhAtb9BQqjael.jpeg)
ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.மதுசுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/SK0y8KJuHY5zPaWYrbRQ.jpeg)
பணிபுரியும் இடத்தில் பார்வையைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/DQDLZDZr0m15FBrccheo.jpeg)
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள், குமரன், ப்ரீதா ராம்பிரசாத், சாமுவேல் விஜய், அருள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“