சென்னை மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக குறைந்த எடையுடைய கலாம் சாட் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கான மைக்ரோசாட் - ஆர் ஆகிய இரு செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கலாம் சாட் விண்ணில் நிறுவப்பட்டது
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் ஆய்வு மையத்திலிருந்து, பிஎஸ்எல்வி -சி44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கோள்களும் நேற்றிரவு சரியாக 11:37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன. ராக்கெட் ஏவுப்பட்ட 14 -வது நிமிடத்தில் மைக்ரோசாட் -ஆர் செயற்கோள் 277 கி.மீ. தொலைவில் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 700 கிலோ கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ள இந்த செயற்கோள், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை மேம்படுத்த உதவும். பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்கு தேவையான புவியின் பல்வேறுபட்ட புகைப்படங்களை இச்செயற்கோள் அனுப்பும்.
முழுக்க முழுக்க மாணவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக குறைவான எடைகொண்ட, அதாவது 1.26 கிலோகிராம் மட்டுமே எடையுள்ள கலாம்சாட் செயற்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 103-வது நிமிடத்தில், கலாம்சாட் தொலையுணர்வு செயற்கோள், 450 கிலோமீட்டர் தொலைவில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
January 2019
சென்னையை சேர்ந்த ஸ்ரீமதி கேசன் என்பவர் நடத்தி வரும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா எனும் அமைப்பைச் சேர்ந்த மாணவர் குழுவினரால் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது. 12 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்கைகோளின் ஆயுள்காலம் 2 மாதங்களாகும்.
விண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி! யார் இவர்?
இந்த இரண்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியில் நாசாவையே விஞ்சிய இஸ்ரோவின் சாதனையும், மாணவர்களின் கண்டுபிடிப்பும் பாராட்டிற்குரியது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். மேலும் இந்த சாதனையை படைத்த இன்ஸ்ரோ மற்றும் மாணர்கள் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.