/indian-express-tamil/media/media_files/HA8ZcbpLCDDVUq4wlUyv.png)
சென்னை ஐஐடி வளாகத்தில் உலகின் மிக நீளமான மலைபாம்பு சிக்கியது
Python trapped in IIT Chennai campus: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் வரிகோடுகள் உடைந்த வித்தியாசமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாம்பு பார்க்க மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது.
இது வரிகோடுகள் உடைய மலைபாம்பு இனம் என்பதும் உலகின் நீளமான இனத்தை சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இந்த இன மலைபாம்பு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் எப்படி வந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் இந்தப் பாம்புகள் அந்தமான் நிகோபார் உள்ளிட்ட தீவுகளில் காணப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “வரிகோடுகள் உடைய மலைபாம்பு அச்சுறுத்தல் கொண்ட பாம்பினம் கிடையாது.
எனவே மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம். இந்தப் பாம்பு இனங்கள் தற்போது பெரிதளவு இல்லை. எனினும் சென்னை பாம்பு பண்ணையில் இருந்து பாம்பு குட்டி ஒன்று வெளியேறி இப்படி பெரிய பாம்பாக மாறி இருக்கலாம்.
வியாழக்கிழமை இரவு இந்தப் பாம்பு குறித்து தகவல் வந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் இந்தப் பாம்பை மீட்டனர்” என்றனர்.
இது குறித்து சென்னை பாம்பு பண்ணை இயக்குனர் ராஜ ரத்தினம், “பாம்பு பண்ணையில் இருந்து பாம்பு வெளியேற வாய்ப்பே இல்லை” என்றார்.
இதனால் இந்தப் பாம்பை கடத்தல்காரர்கள் யாரேனும் பிடித்து, போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக இங்கே கொண்டுவந்து விட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.