சென்னையில் அதிர்ச்சி: பானிபூரி மசாலாவில் புழு; வடமாநிலத்தவருக்கு தர்ம அடி!
கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அந்த வடமாநிலத்தவரை அப்பகுதி மக்கள் மாடு கட்டும் கம்பியில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அந்த வடமாநிலத்தவரை அப்பகுதி மக்கள் மாடு கட்டும் கம்பியில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
சென்னை பட்டரைவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகைக்காகக் காத்திருந்த வழக்கறிஞர் பிரிவினரும், தொண்டர்களும் அப்பகுதியில் சாலையோரம் பானிபூரி விற்பனை செய்ய வடமாநிலத்தவரிடம் பானிபூரி வாங்கி உண்டனர். அப்போது பசியாக இருந்த இளைஞர்கள், பானிபூரியை வட மாநிலத்தவர் தயார்செய்து தருவதற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்.
Advertisment
பானிபூரி மசாலாவில் புழு இதில் ஒரு இளைஞர் எடுத்து உன்ன சென்ற உருளைக்கிழங்கு துர்நாற்றம் வீசியதால், அதனைச் சோதனை செய்த போது அதில் புழு இருந்தது தெரியவந்தது. மேலும், மேலும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கைச் சூடு செய்து விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அந்த வடமாநில இளைரை அப்பகுதி மக்கள் மாடு கட்டும் கம்பியில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
ஒரே நபர் பலருக்கு விநியோகம் மேலும், அந்நபரிடம் விசாரிக்கையில், தான் முதலாளி இல்லை எனவும் இதுபோன்று பதினைந்துக்கும் மேற்பட்ட பானிபூரி வண்டிகளுக்கும் முதலாளி வேறு ஒருவர் என்றும் கூறியுள்ளார். அவர் ஒரே அறையில் தங்கி பானிபூரியை தயார் செய்து இதுபோன்று 15க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
வடமாநிலத்தவரை வெளுத்து வாங்கிய மக்கள்
தொடர்ந்து, வடமாநிலத்தவரைப் பலமாகத் தாக்கிய ஊர் பொதுமக்கள், உருளைக்கிழங்கு மற்றும் பானிபூரியை தரையில் கொட்டிவிட்டு, இதுபோல் இனி செய்யக் கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும், வடமாநிலத்தவரை அழைத்துக்கொண்டு பானிபூரி தயார் செய்யும் வீட்டிற்குச் சென்ற அப்பகுதி மக்கள் பானிபூரி தயார் செய்யும் இருவரைப் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுநீர் பானிபுரி
கடந்த மாதம், இதே போல அசாம் மாநிலம் கெளஹாத்தியில் பானிபுரி கடை ஒன்றில், அங்கிருக்கும் நபர் வேலை செய்துகொண்டே சிறிய கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரிக்கு உபயோகிக்கும் நீரில் கலக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் விஷ்வருபம் எடுத்திட, கடையின் உரிமையாளரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சாலையோர கடைகளின் சுகாதாரமின்மை இத்தகைய தொடர் சம்பவங்கள், சாலையோர கடைகளை நாடும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம் இன்றி மிக அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.