எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Writer Ponneelan heart attack, ponneelan fall in ill, எழுத்தாளர் பொன்னீலன், பொன்னீலன் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சை, நாகர்கோயில், ponneelan admitted in hospital, kanyakumari, nagercoil, tamil writer ponneelan, senior writer ponneelan, tamil literature
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisment
எழுத்தாளர் பொன்னீலன் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது 80 வயதாகும் பொன்னீலன் தமிழ் நவீன இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர். முற்போக்கு எழுத்தின் முன்னோடி. தமிழ் எழுத்துலகில் மார்க்ஸியராக அறியப்பட்டவர். புதிய தரிசனங்கள், கரிசல், கொள்ளைக்காரர்கள் என நாவல்களையும், புதிய மொட்டுகள், ஊற்றில் மலர்ந்தது, உறவுகள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய புதிய தரிசனங்கள் நாவலுக்காக 1994-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், நாகர்கோவிலில் எழுத்தாளர் பொன்னீலன் வசிக்கும் பகுதியில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வசிக்கும் வீடு உள்ளடக்கிய பகுதி பூட்டப்பட்டது. இதனால், பொன்னீலன் மாத கணக்கில் வெளியே வர முடியாததால் கடந்த சில நாட்களாக ம்ன உளைச்சலில் இருந்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், எழுத்தாளர் பொன்னீலனுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நண்பர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குலசேகரம் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எழுத்தாளர் பொன்னீலனுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் பெரிய சிக்கல் எதுவுமில்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய மனைவி, மகள் இருவரும் மருத்துவமனையில் உடன் உள்ளனர்.
பொன்னீலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவர் வசிக்கும் பகுதி நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக பூட்டப்பட்டுள்ளதால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மிகுந்த சிரமமாக இருந்ததாக அவருடைய நண்பர்கள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.
நலமாக இருக்கிறேன்: பொன்னீலன்
இந்த நிலையில் எழுத்தாளர் முனைவர் கமல.செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எழுத்தாளர் பொன்னீலனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
கமல.செல்வராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், எழுத்தாளர் பொன்னீலன் “நான் நலமாக இருக்கிறேன். நண்பர்களின் அண்பாலும் அருளாலும் தான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"