/indian-express-tamil/media/media_files/qMjHRcPbAnDH9qgJAguK.png)
இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும்.
chennai-rain | “கனமழை எங்கள் வாழக்கையை புரட்டிப் போட்டுவிட்டது; ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்" என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள பதிவில், "கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை 5 மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம்.
கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. மழை நீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை.
ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின. கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது.
இருபது லட்ச ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் தொடங்கினோம்.
உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது. புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தற்போது என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறோம். நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு" எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.