Xi Jinping Naredra Modi informal meet China president's schedule for next two days : இந்தியா வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டு நாள் திட்டங்கள் இவை தான். இன்று பகல் 02:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்பு அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரம் நோக்கி விரைகிறார். 200 சீன அதிகாரிகள் சீன அதிபருடன் பயணிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் 34 இடங்களில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள் சிறப்பு வரவேற்பினை அவருக்கு அளிக்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து மாமல்லபுரத்து புராதான சிறப்பம்சங்களை பார்வையிடுகிறார் ஜி ஜின்பிங். அர்ஜூனர் சிலை, ஐந்துரதங்கள் மற்றும் கடற்கரை கோவிலை இவ்விரு தலைவர்களும் இணைந்து பார்வையிடுகிறார்கள். பின்னர் மாலை சரியாக 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக 700க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் இதர கலைஞர்கள் மாமல்லபுரத்தில் தயாராகி வருகின்றனர். மாலை 06 : 45 மணி அளவில் பிரதமருடன் இரவு உணவை உட்கொள்கிறார் ஜின்பிங்.
மேலும் படிக்க : சீன அதிபர் சென்னை வருகை : சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
நாளைய நிகழ்ச்சி நிரல்
நாளை காலை 09:50 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் தாஜ் பிஷெர்மென்ஸ் கோவ் விடுதிக்கு செல்கிறார். 10:50 மணி அளவில் உயர்மட்ட குழுவினர்களின் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 11:45 மணி அளவில் மதிய உணாவு ஏற்பாடாகிறது. 12:45 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்படுகிறார். 01:30 மணிக்கு சென்னையில் இருந்து சீனா திரும்புகிறார் ஜி ஜின்பிங்.
பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. புகைப்படங்கள் கூட மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டவர்களால் மட்டுமே எடுக்க இயலும். சீன அதிகாரிகள் அனைவரும் கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தங்க இருப்பதால் காவல்துறை பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 9 ஆயிரம் காவலர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் காவலர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். சீன அதிபரின் பாதுகாப்பிற்காக சீனாவின் கார்கோ விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்காக நான்கு குண்டு துளைக்காத கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபரின் வருகை குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.