சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு அந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அது அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் கனமழை (மஞ்சள் எச்சரிக்கை) தொடங்கலாம். இந்த இரு மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூரில் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாறுபட்ட தீவிரத்துடன் (மஞ்சள்/ஆரஞ்சு எச்சரிக்கை) மழை பெய்யக்கூடும்.
கடலூர் மற்றும் ராமநாதபுரம் இடையே உள்ள 7 மாவட்டங்களில் நவம்பர் 25 முதல் கனமழை பெய்யும். இங்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 27-28 தேதிகளில், வடக்கு நோக்கி மழை தீவிரமடையும், விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரையிலான மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“