தமிழக விபரீதம்: யூடியூப் வீடியோ உதவியுடன் காதலிக்கு பிரசவம் பார்த்த இளைஞர், குழந்தை பலி
திருவள்ளூரில் கர்ப்பமான காதலியை காதலன் தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததால் குழந்தை பலியானது. இதனால், போலீசார் காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் கர்ப்பமான காதலியை காதலன் தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததால் குழந்தை பலியானது. இதனால், போலீசார் காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் கர்ப்பமான காதலியை தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisment
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இளைஞர் சௌந்தர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கேஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் கல்லூரி மாணவி ஒருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கிப் பழகியதால் கல்லூரி மாணவி கர்ப்பமானார். இதனை காதலர்கள் இருவரும் வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியான மாணவிக்கு நேற்று (மார்ச் 18) திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக நினைத்து பயந்த அந்தப் பெண், காதலன் சௌந்தருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது பற்றி யாருக்கு வெளியே தெரியக் கூடாது என்று நினைத்த காதலிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்து அந்தப் பெண்ணை காட்டுப் பகுதிக்கு பிரசவம் பார்க்க அழைத்துச் சென்றார்.
பின்னர், சௌந்தர் தனது செல்போனில் யூடியூப்பில் பிரசவ வீடியோவைப் பார்த்து பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளார்.
அப்போது, குழந்தையின் கை பகுதி மட்டும் தனியாக முதலில் வந்திருக்கிறது. இதனால், அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சௌந்தர் பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளார்
பிரசவ வலியில் துடித்தபடி மோசமான நிலையில் வந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தாகக் கூறி, பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை இராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலிக்கு யூடியுப் வீடியோ மூலம் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழக்கக் காரணமான செளந்தரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர், அந்தப் பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விபரீத சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"