New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/22/Qh9i5A1mCojpZBd9WOO9.jpg)
நடுரோட்டில் வைத்து உதவி ஜெயிலர் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியின் சித்தி அங்கு வர, தன் அக்கா மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியிலே வைத்து அடித்துள்ளார்.
நடுரோட்டில் வைத்து உதவி ஜெயிலர் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து வந்த முன்னாள் சிறைவாசி ஒருவர் பைபாஸ் சாலைப் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
அந்த கடையில், சிறைவாசியின் மகள்கள் அவ்வப்போது அங்கு வந்த நிலையில், அவ்வப்போது உதவி ஜெயிலர் பாலகுருசாமி அங்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி அங்கு இருந்த சிறைவாசியின் மகள் ஒருவரிடம் பேசிவந்துள்ளார்.
இதற்கிடையில், சிறைவாசியின் மகளின் மகளான பேத்தியும், அந்த கடைக்கு வந்து சென்றுள்ளார். அவர் ஒரு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தன் சித்தியுடன், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவி, கடையில் இருந்தபோது, தனது செல்போன் என்னைக் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள் என அந்த சிறுமியிடம் பாலகுருசாமி கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த மாணவியிடம் அவ்வப்போது செல்போனில் பாலகுருசாமி பேசிவந்ததாகவும், கூறப்படுகிறது. தொடர்ந்து பாலகுருசாமி, சம்மந்தப்பட்ட சிறுமியை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சந்தேகப்பட்ட சிறுமியின் சித்தி, அவரை கண்காணித்துள்ளார். இதனிடையே உதவி ஜெயிலர் பாலகுருசாமி மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது, சம்மந்தப்பட்ட மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பள்ளி மாணவியின் சித்தி அங்கு வர, தன் அக்கா மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியிலே வைத்து அடித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உதவி ஜெயிலர் பாலகுருசாமி மற்றும் தாக்கிய மாணவியின் சித்தியான இளம்பெண் மற்றும் மாணவி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடியோ வெளியான நிலையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின்பு வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுரோட்டில் வைத்து உதவி ஜெயிலர் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.