காதலிக்க மறுத்த சிறுமியை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர இளைஞன் கைது!

நாள் தோறும் சிறுமியை பின் தொடர்ந்து, தன்னை காதலிக்கும்மாறு வற்புறுத்தியுள்ளான்.

மதுரையில் காதலிக்க மறுத்த சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் 9 ஆம் வகுப்பு சிறுமியை பாலமுருகன் என்ற இளைஞன் நீண்ட காலமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், நாள் தோறும் சிறுமியை பின் தொடர்ந்து, தன்னை காதலிக்கும்மாறு வற்புறுத்தியுள்ளான்.

பாலமுருகனின் பேச்சு மற்றும் நடத்தை பிடிக்காததால் சிறுமி  அவனை பலமுறை எச்சரித்துள்ளார். இருந்தும் பால்முருகன் , சிறுமியை பள்ளி செல்லும் நேரங்களில் விடாமல் பின் தொடர்ந்துள்ளான். இதனால், பயந்த அச்சிறுமி, பெற்றோர்களிடம் இதுக் குறித்து கூறியுள்ளார். பாலமுருகன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞன் நேற்று (16.218.) சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,  தெருவில் மறைந்திருந்து, சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான.

சிறுமியின்  அலறல் சத்தத்தை கேட்டு, ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து, திருமங்கலம் அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியதால், மருத்துவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்ம், இதுக் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் திருமங்கலம் பகுதி காவல் துறையினர், பாலமுருகனை வலை வீசி தேடி வந்தனர்.

புதுப்பட்டி என்ற பகுதியில் பாலமுருகன் மறைந்திருந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டு தப்பிக்க முயன்ற போது இளைஞனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவனை கைது செய்து, 5 பிரிவுகலின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு தலை காதலால் சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close