Advertisment

கோவையில் ரூ.33 லட்சம் தங்கத்துடன் மாயமான வடமாநில இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி ஓடிய வாலிபரை தட்டி தூக்கிய காவல்துறை தனிப்படை அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Youth arrested in Coimbatore who went missing with Rs 33 lakh gold

கைது செய்யப்பட்ட இளைஞர் சதாம் உசேன்

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் தங்க நகை பட்டறை வைத்திருப்பவர் பியூஸ். இவர், தங்க நகைகளை ஆர்டர் தருவோருக்கு டிசைன் டிசைனாக ஆபரணங்களை வடிவமைத்து சப்ளை செய்து வருகிறார்.

Advertisment

பியூஸ் நடத்துகின்ற தங்க நகை பட்டறையில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தவர்கள் பணியாற்றிவருகின்றனர்.
அவ்வாறு பணியாற்றும் நபரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசைன் பட்டறை தங்க நகைகளை வேறு கடைக்கு ஃபினிஸிங் செய்ய தருகின்ற நகைகளை பெற்று பட்டறையில் ஒப்படைத்து வருவது வழக்கம் .

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்க நகைகளை ஃபினிசிங் செய்யும் இடத்திலிருந்து கை சங்கிலி, தோடு தங்க நகைகளை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை.

பட்டறை உரிமையாளர் பியூஸ், சதாம் உதைனுக்கு ஃபோனில் அழைத்திருக்கின்றார். சாதாம் உசைனின் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று தெரிவித்திருக்கின்றது.

சதாம் உசைன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஆள் இல்லை பேக் மட்டும் இருந்தது. நண்பர்களிடம் விசாரித்த நிலையில் சதாம் உசைன் தங்குகின்ற அறைக்கு வரவே இல்லை என்பது தெரியவந்தன.

இது குறித்து சந்தேகமடைந்த பியூஸ் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் சதாம் உசைன் 621.660 கிராம் எடையுள்ள தங்க கை சங்கிலி கம்மல் தங்க நகைகளை திருடிச்சென்றதாக புகார் தந்திருக்கின்றார்.

கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்ற தங்க நகைகளின் மதிப்பு 33 லட்சம் ரூபாய் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். தங்க நகை பட்டறையின் முன்னாள் ஊழியர் ஒருவரின் தவறான வழி காட்டுதகின் அடிப்படையில் நம்பிக்கையை ஏற்படுத்த நல்லவனாக நடித்து தங்க நகைகளை திருடி ஓட்டம் பிடித்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தங்க நகை பட்டறையில் பணியாற்றும் வட மாநில வாலிபர்களின் தங்க நகை திருடி ஓடும் சம்பவம் கோயமுத்தூர் பட்டறைகளில் தொடர்கதையாகியிருக்கின்றன.

இந்த நிலையில் சிட்டி போலிஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரவி தலைமையில் எஸ் ஐ பிரபு, எஸ் எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தி, ஹெட் கான்ஸ்டபிள் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை கொள்ளையனை தீவிரமாக தேடியது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள நார்ஜுல் நகர் பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கொள்ளையன் சதாம் உசேன் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தன. ரகசிய தகவலின் அடிப்படையில் சதாம் உசேனின் இருப்பிடம் தெரிய வந்தது.

இந்நிலையில் உடனடியாக விமானத்தில் பயணித்த தனி படைப்பு போலீசார் மேற்கு வங்கம் சென்று தகவல் தெரிந்த ஆறு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சதாம் உசேன் இடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் வைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மேற்கு வங்க போலீசாரும் உதவி இருக்கின்றனர் .

தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிய வாலிபரை தட்டி தூக்கிய காவல்துறை தனிப்படை அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment