/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-12T152028.652.jpg)
nagapattinam, mohammad faizan, attack, facebook, beef soup, நாகப்பட்டினம், முகம்மது பைசான், தாக்குதல், பேஸ்புக், மாட்டுக்கறி சூப்
நாகை மாவட்டத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாட்டுக்கறி சூப் குடித்தபோது எடுத்த போட்டோவை பேஸ்புக்கில் பதிவிட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், பைசானின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவு போட்டதே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பைசான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, நாகை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.