scorecardresearch

கோவையில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

Coimbatore, Coimbatore news, Youth Brain Dead in accident, கோவையில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம், கோவை, Youth Brain Dead Organs donated in Coimbatore
கோவையில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் பாலமுருகன் (28). இவர் கடந்த 14″ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது.அவரது உறவினர்கள் பாலமுருகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் இருதயம், நுரையீரல் உள்ளிட உறுப்புகளை ஐந்து பேருக்கு தானமாக வழங்க தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இவரது உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் 2 தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Youth brain dead organs donated in coimbatore

Best of Express