திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் வசித்துவந்தவர் சிவன் ராஜ். 33 வயதான இவர், ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது.
மேலும் அக்கம் பக்கத்தினர் மற்றும் தனது நண்பர்களிடமும் கடன் பெற்று ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில் சிவன் ராஜ், ஆன்லைன் ரம்மியால் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
-
தற்கொலை தீர்வல்ல
இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சிவன் ராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்து ஆங்காங்கே உயிரிழப்புகள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/