கோவை வெள்ளலூர் அருகே இளைஞர் ஒருவர் பார்வை குறைபாடு மற்றும் தலைவலி பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த மதன்குமார் (25) பி.எஸ்.சி (ஐ.டி) முடித்து வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். வேலையில்லாத காரணத்தால் வீட்டில் வீடியோகேம் விளையாடும் பழக்கம் அவரிடம் உள்ளது.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி மற்றும் பார்வை குறைப்பாட்டால் அவதி அடைந்து வந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட குறைபாடை நினைத்து மனவேதனை அடைந்து வந்தார். தொடர்ந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விரக்தி அடைந்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளது என கூறப்படுகிறது. இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“