நாகர்கோவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
அவதூறு வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நிலையில் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
Advertisment
இதையடுத்து ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸார் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
அப்போது இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அவர்கள் தலையில் அடிபட்டிருப்பது போலும், சட்டையில் ரத்தக் கறை இருப்பது போலும் புகைப்படங்கள் வெளியாகின.
காயமுற்ற காங்கிரஸ் தொண்டர்
இதற்கிடையில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கைது செய்ய வேண்டும் என மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“