கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அப்படி இருந்த போதும் அது ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடிக்க முயன்றனர்.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்குள் சென்று மண்ணென்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.
இவரை தீயணைப்புதுறையினர் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவரது உடலில் 50% தீக்காயம் அடைந்த நிலையில் அவரை சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, வி.ஏ.ஓ பாகிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.