வடபழனி தங்கவேல் காலனி வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது 13 வயது மகன் பிரஜன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனது நண்பரான கார்த்திகேயன் என்பவரோடு சேர்ந்து படிப்பதற்காக வடபழனி அழகிரிநாதர் முதல் தெருவில் உள்ள பிளாசா மேனர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வந்துள்ளார் .
அப்போது 4வது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீதி ஏறி நின்று நண்பர்களுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“