scorecardresearch

இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல்: ரயில் மீது ஏறி கொடி அசைத்த இளைஞர்; மின்சாரம் தாக்கி படுகாயம்

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் இளைஞர்கள் ரயில் மீது ஏறி கொடியசைத்தபோது மின்சாரம் தாக்கியதில் முகேஷ் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Tamil news, tamil nadu news, tamil news today, latest tamil new, Paramakudi news, latest news, Ramnad district latest new, Immanuel Sekaran commemoration news, youth electrocute at top of train

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தலுக்கு வந்த முகேஷ் என்ற இளைஞர் ரயில் மீது ஏறி கொடி அசைத்த போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இம்மானுவேல் நினைவேந்தலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில், ஒரு குழுவினர் அஞ்சலி செலுத்திவிட்டு, பரமக்குடி நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தேவகோட்டை பனிப்புலான் வயல் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20) என்பவர், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் மேலே ஏறி கொடி அசைத்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கொடி மின் கம்பியில் பட்டதில் அவர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அந்த இளைஞரை ரயில்வே போலீசார் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தலுக்கு வந்த இளைஞர் ரயில் மீது ஏறி கொடி அசைத்த போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Youth waives flag at top of train then he electrocuted injured

Best of Express