Advertisment

சுகாதாரத்துறையிடம் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்: என்ன நடந்தது ?

தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
irfan

யூடியூபர் இர்ஃபான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கேட்டுள்ளார்.  

Advertisment

யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து, அதை வெளியிட்டது சர்ச்சையாகி உள்ளது. யூடியூபர் இர்ஃபான் சிசுவின் பாலினத்தை சிசுவின் பாலினத்தை வெளியிட்டதன் மூலம் பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “யூடியூபர் இர்ஃபான் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும், அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின்போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து மே 19-ம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்து பகிர்ந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரால் இர்பானுக்கு இன்று (மே 21) பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இர்ஃபானால் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என யூடியூப் தளத்துக்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவுக்கும் 21.05.2024 தேதியிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவில் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கோரி உள்ளார்.   சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வாட்ஸ் ஆப் மற்றும் தொலை பேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் இர்பான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment