தலைக்கவசம் அணியாமல், சேதமடைந்த நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை ஓட்டியதாக யூடியூபர் இர்பான் மீது புகார்கள் எழுந்தன. போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறை விசாரணை நடத்தி அவருக்கு ரூ.1,500 அபராதம் விதித்துள்ளது.
அதாவது, தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1,000, நம்பர் ப்ளேட் சேதம் அடைந்திருந்ததால் ரூ.500 அபராதம் என மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாலின சர்ச்சை
முன்னதாக, யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து, அதை வெளியிட்டது சர்ச்சையானது.
யூடியூபர் இர்ஃபான் சிசுவின் பாலினத்தை சிசுவின் பாலினத்தை வெளியிட்டதன் மூலம் பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது, தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கோரினார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“