பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பது குறித்த தகவலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது தனது மனைவி பிரசவத்தின்போது, குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான ஃபாலோயர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர்.
மேலும் தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல் விடுதலை பட நடிகர் சூரி வரை பல முன்னணி நடிகர்கள் இவருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதேபோன்று பல செலிபிரிட்டிகளுடன் இவர் நேர்காணல் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட இவர், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் பாலினம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இதனிடையே தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இர்பானுக்கு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில், குழந்தை பிறந்தது. இது குறித்து அப்போது இர்பான் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனிடையே பிரசவத்தின்போது தாயையும் குழந்தையையும் பிரிப்பதற்காக, தொப்புள் கொடி அறுக்கும்போது வீடியோ எடுத்த இர்பான தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி இது தவறானது என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“